Breaking News

எந்த தொழிலும் செய்யாத அவர் எப்படி பணக்கார முதலமைச்சராக வந்தார்? ஊழல் செய்ததால் தான் அவர் பணக்கார முதலமைச்சராக வந்துள்ளார்.

 


புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி,


நிதி பற்றாக்குறை என கூறி பெட்ரோல், டீசல் விலையை அரசு உயர்த்தியுள்ளது. இதனால் சாதாரன ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். அப்படி குறைக்கவில்லை என்றால் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்துவோம்‌ என கூறினார்.


பாஜகவுக்கு பெண்களை பற்றி பேசுவதற்கு தகுதியில்லை. பாஜகவினர் மேல் தான் பாலியல் பலாத்கார வழக்கு அதிகம் உள்ளது. எனவே பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்போம் என நாடகத்தை தமிழகத்தில் பாஜக அரங்கேற்ற வேண்டாம் என்றார்.


 இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களில் 6-வது பணக்கார முதலமைச்சர் ரங்கசாமி என மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அவர் எந்த தொழிலும் செய்யவில்லை அப்படி இருக்க எப்படி பணக்கார முதலமைச்சராக வந்தார்? ஊழல் செய்ததால் தான் அவர் பணக்கார முதலமைச்சராக வந்துள்ளார். இந்த ஊழல் ஆட்சியில் புதுச்சேரி மக்கள் தவித்து கொண்டு இருக்கிறார்கள் என்றார்.

No comments

Copying is disabled on this page!